/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் ஆணைய கட்டடம் தை மாதம் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்
/
நுகர்வோர் ஆணைய கட்டடம் தை மாதம் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்
நுகர்வோர் ஆணைய கட்டடம் தை மாதம் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்
நுகர்வோர் ஆணைய கட்டடம் தை மாதம் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : டிச 31, 2025 04:57 AM

புதுச்சேரி: நுகர்வோர் ஆணைய கட்டடம் வரும் தை மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.
நுகர்வோர் வழங்கல் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் சுந்தரவடிவேலு, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல், குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் சாரங்கபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, தன்னார்வள நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த 15 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கி பேசியதாவது:
நுகர்வோரின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களை பாதுகாக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்கும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு, அதற்கு தீர்வு காண்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. மக்கள் கேட்டபடி அரிசி, கோதுமை வழங்குகிறோம். விரைவில் கேழ்வரகு வழங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இது மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு. மக்கள் சின்ன பொருளை வாங்கினாலும், பார்த்து வாங்க வேண்டும். அதில் குறையேதும் இருந்தால் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில் நாம் செயல்பட்டு வருகிறோம். நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நுகர்வோர் ஆலோசனைக் குழு, வழிநடத்தல் குழு அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நுகர்வோர் அமைப்புகளால் புதுச்சேரி மக்களுக்கு நன்மை. குறைகள் இருந்தால் அதை அரசு சரிசெய்து கொடுக்கும். நுகர்வோர் ஆணையத்திற்கான கட்டடம் வரும் தை மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும்' என்றார்.

