/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்துறை கண்காட்சி 17ம் தேதி துவக்கம்
/
தொழில்துறை கண்காட்சி 17ம் தேதி துவக்கம்
ADDED : செப் 11, 2025 03:09 AM

புதுச்சேரி: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், புதுச்சேரியில் 2ம் ஆண்டு 'தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ்- 2025' சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் வரும் 17ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து சி.ஐ.ஐ., புதுச்சேரி பிரிவு தலைவர் சமீர் கம்ரா கூறியதாவது:
சி.ஐ.ஐ., சார்பில், புதுச்சேரி உற்பத்தி திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு நடந்த முதல் தொழில்துறை கண்காட்சியில் 30 நிறுவனங்கள் பங்கேற்றன. அதன்படி, 2வது ஆண்டு 'தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ்-2025' சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் வரும் 17ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
கண்காட்சியில் 80 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில், மருந்து தயாரிப்பு, வாகன பாகங்கள், பேட்டரி கம்பெனிகள், சோலார் உற்பத்தி துவங்கி பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அரசின் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, இந்திய எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
புதுச்சேரியின் உற்பத்தி திறனை அறிய பிரான்ஸ், ஜெர்மனி, தைவான், தாய்லாந்து நாடுகளை சேர்ந்த வர்த்தக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உட்பட புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பொறியியல் பயிலும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகள், உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி குறித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்டம் அறிமுகமாவது வரவேற்கத்தக்கது' என்றார்.
முன்னாள் தலைவர் சண்முகானந்தம் கூறுகையில், 'ஒரு மாதத்திற்குள் மின்சார இணைப்புகள் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழிற்சாலை செயல்பாடு தொடர்பாக 23 கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அரசுடன் பணியாற்றி வருகிறோம்.
கடந் 2023--24ல் புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதி வணிகம் ரூ. 3 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது' என்றார்.