/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி தலைவர் சாமிநாதனுக்கு ஆதரவாக 300 பேர் பா.ஜ.,வில் இருந்து விலகல்

ADDED : செப் 11, 2025 03:10 AM
புதுச்சேரி: முன்னாள் தலைவர் சாமிநாதனை ஆதரித்து மேலும், 300 பேர் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி, பா.ஜ., மாநில தலைவராக இருந்த சாமிநாதன், கடந்த 2023ம் ஆண்டு மாற்றப்பட்டார். ஆனால், அவருக்கு மாற்று பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால், கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்த சாமிநாதன், கடந்த 9ம் தேதி பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சாமிநாதனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லாஸ்பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் துணைத் தலைவர்கள் முருகன் (எ) ஏழுமலை, ஆனந்தராஜ், குமரேசன், தொழில் பிரிவு நடராஜ், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, சுப்ரமணி, வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த கார்த்திக், கங்கை அமரன், கந்தசாமி பாபு, மகளிரணி முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கனகவல்லி, உழவர்கரை மாவட்ட முன்னாள் தலைவர் வள்ளி, இளைஞரணி சந்துரு, தரணி மற்றும் தொகுதி மகளிரணி நிர்வாகிகள், கிளை தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 300 பேர் நேற்று 10ம் தேதி முதல் பா.ஜ., கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.