/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ. 36.70 லட்சம் வழங்கல்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ. 36.70 லட்சம் வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ. 36.70 லட்சம் வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ. 36.70 லட்சம் வழங்கல்
ADDED : நவ 18, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; இந்திரா நகர் தொகுதியில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு 36.70 லட்சம் ரூபாய்க்கான ஆணையை, அரசு கொறடா ஆறுமுகம் வழங்கினார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தின் மூலம், இந்திரா நகர் தொகுதியில் பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
அதில், கல் வீடு கட்டுவதற்கு இரண்டாம் தவணையாக 19 நபர்களுக்கு 30.40 லட்சம் ரூபாய், மூன்றாவது தவணையாக 9 நபர்களுக்கு 6.30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மொத்தம் 36.70 லட்சத்திற்கான நிதி ஆணையை அரசு கொறடா ஆறுமுகம் பயனாளிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் உடனிருந்தனர்.