/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் கல்லுாரியில் மாணவிகளுக்கு அடிப்படை பயிற்சி
/
பாரதிதாசன் கல்லுாரியில் மாணவிகளுக்கு அடிப்படை பயிற்சி
பாரதிதாசன் கல்லுாரியில் மாணவிகளுக்கு அடிப்படை பயிற்சி
பாரதிதாசன் கல்லுாரியில் மாணவிகளுக்கு அடிப்படை பயிற்சி
ADDED : ஆக 10, 2025 08:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்' குறித்த ஒருநாள் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
பாரதிதாசன் அரசு கல்லுாரி வேலைவாய்ப்பு பிரிவு, அட்டால் இன்குபேஷன் சென்டர் இணைந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் அடிப்படை பயிற்சியை நடத்தின. முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார்.
உதவி பேராசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியை வரலட்சுமி, வேலை பெறும் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டம் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
வைடெசோ தொழில்நுட்பத்தின் தொழில் முனைவோர் ராஜசுந்தரி, ஆலோசகர் இந்து ஆகியோர் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த நேரடி பயிற்சி அளித்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சந்திரா நன்றி கூறினார்.