
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி என்.ஆர்.காங்., மாநில இளைஞரணி துணைத் தலைவராக சத்யா நியமிக்கப்பட்டுள்ளார் .
என்.ஆர்.காங்., இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் அறிக்கை;
என்.ஆர்.காங்., கட்சியின் இளைஞரணியில் தற்போது மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளும், தொகுதி அளவிலான நிர்வாகிகளும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இளைஞரணி மாநில துணைத் தலை வராக முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த சத்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்.ஆர்.காங்., சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வரும் சத்யாவிற்கு, அனைத்து நிர்வாகிகளும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.