ADDED : செப் 11, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 2.46 லட்சத்தை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
சாரத்தை சேர்ந்த நபருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது.
அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார்.
அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டது.
இதேபோல், வேல்ராம்பட்டை சேர்ந்தவர் 1 லட்சம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 24 ஆயிரம், திருபுவனையை சேர்ந்தவர் 57 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் 8 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 800, என 6 பேர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.