
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:உப்பளம் தொகுதி கோலாஸ் நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நகராட்சி மூலம் ரூ.33 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இப்பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, காங்., பொது குழு உறுப்பினர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.