ADDED : டிச 28, 2025 07:54 AM

வாசகர்கள் தங்கள் மனக்குமுறலை 'தினமலர்' நாளிதழில் கொட்டி லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்துவதற்கான சிறப்பு பகுதி.
'காசில்லாமல் காரியம் நடக்காது' எனும் அளவிற்கு அரசுத்துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தட்டிக்கேட்சு யாருமே இல்லையா, என்ற குமுறல்கள் சமூகத்தின் பல மட்டத்திலிருந்தும் ஒலிக்கின்றன. எனவே, லஞ்சப்பேர்வழிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிய இந்த சிறப்பு பகுதி துவக்கப்படுகிறது.
வாசகர்களே...
கட்டட அனுமதி, மின் இணைப்பு, சான்றிதழ், அரசு நலத்திட்டங்கள், அரசு சலுகைகள் பெற என. ஏதேனும் ஒரு காரியத்துக்காக நீங்கள் அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் / ஊழியர்கள் உங்களிடம் லஞ்சம் பறித்திருந்தால்...
அதுகுறித்த மோசமான அனுபவங்களை விரிவாக எழுதி, உங்கள் பெயர், மொபைல் போன் எண்ணுடன் (மேலதிக விவரங்கள் தேவைப்படின் தினமலர் செய்திப்பிரிவில் இருந்து உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக) எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
லஞ்சம் பெற்றது எந்த அரசுத்துறை அலுவலகம், அது எங்கு உள்ளது. லஞ்சம் பறித்த அதிகாரி பெயர். அவர் வகிக்கும் பதவி அல்லது அந்த அதிகாரியின் பெயரைக்கூறி லஞ்சம் வசூலித்த ஊழியர், ஏஜன்ட் யார், எந்த காரியத்துக்காக லஞ்சம் பறித்தனர், எவ்வளவு பறித்தனர் என்ற விவரங்கள் மிக மிக முக்கியம்.
உங்களின் உள்ளக்குமுறல்கள் திங்கள் தோறும் தினமலர் நாளிதழில் வெளியாகும்.
உங்கள் பெயரோ, பிற விவரங்களோ வெளியிடப்படமாட்டாது: மிக ரகசியமாக வைக்கப்படும்.
இப்பகுதி. சாமானியர்களின் சாட்டை... சுழற்றி சுத்தப்படுத்துங்கள் நாட்டை!
வாட்ஸ் அப் மற்றும் அரட்டை செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்ப...
95666 97267/ e-mail: cbereaders@dinamalar.in
தபால் முகவரி: 'லஞ்சம் என்னிடம் பறித்தனர்' பகுதி', தினமலர் டி.வி.ஆர்., ஹவுஸ்,சுந்தராபுரம், கோவை -641 024.

