sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு

/

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு


UPDATED : செப் 18, 2025 12:00 AM

ADDED : செப் 18, 2025 04:17 PM

Google News

UPDATED : செப் 18, 2025 12:00 AM ADDED : செப் 18, 2025 04:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
''இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம்'' என இஸ்ரோ தலைவர் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:



ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்; 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை விண் ஏவூர்தியில் அனுப்ப முடிவு செய்துள்ளோம். வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜி தான். ஏஐ தொழில்நுட்பம் விண்வெளித்துறையில் வந்துவிட்டது.

இந்த திட்டம் வெற்றி அடைந்த பிறகு, இரண்டு ஆளில்லா ராக்கெட்டை அனுப்பிய பிறகு, 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆள் அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளோம். ககன்யான் திட்டத்திற்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. ஆயிரத்திற்கு மேல் சோதனை செய்ய வேண்டும். 85 சதவீதம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ராக்கெட்டை டெவலப் செய்ய வேண்டும். 1962ம் ஆண்டு நாம் விண்வெளி திட்டத்தை ஆரம்பித்தோம். நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு இந்தியா.

நிலாவில் தண்ணீர் இருக்கிறது என்று சந்திரயான் 1 கண்டுபிடித்தது. முதலில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை அனுப்பிய நாடு ரஷ்யா. அவர்கள் ஒரே ராக்கெட்டில் 37 செ யற்கைக்கோளை அனுப்பி இருந்தார்கள். நாம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை வேண்டும் என திட்டம் போட்டோம். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம். இஸ்ரோ நிறைய உலக சாதனைகளை செய்து வருகிறது. மாணவர்களுக்கு விண்வெளி துறையின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us