தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்டத்தில் நாளை இரண்டாம் நிலை காவலர் தேர்வு: 10,617 பேர் எழுத ஏற்பாடு

மாவட்டத்தில் நாளை இரண்டாம் நிலை காவலர் தேர்வு: 10,617 பேர் எழுத ஏற்பாடு

மாவட்டத்தில் நாளை இரண்டாம் நிலை காவலர் தேர்வு: 10,617 பேர் எழுத ஏற்பாடு


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு நாளை 7 மையங்களில் நடக்கிறது.மாவட்ட காவல் துறை அலுவலக செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 3,359 காலிப் பணியிடங்களை நிரப்பிட இரண்டாம் நிலை காவலர் நேரடி எழுத்துத் தேர்வு (இரண்டாம் நிலை காவலர், சிறைத் துறை காவலர், தீயணைப்புத் துறை காவலர்) நாளை 10ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி, கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி, அரசு பெரியார் கல்லுாரி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, ஜட்ஜ் பங்களா ரோடு சி.கே.பள்ளி, கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. 7,294 ஆண்கள், 3,323 பெண்கள் என மொத்தம் 10,617 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை 10:00 மணி முதல், 12:40 வரை நடக்கிறது. தேர்வாளர்கள், தேர்வு மையங்களில் காலை 8:30 மணிக்குள் இருக்க வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு, பால் பாயிண்ட் பேனா நீலம் அல்லது பிளாக் கொண்டு வர வேண்டும். கைப்பை, மொபைல் போன், புளுடூத் மற்றும் எலக்டரானிக்ஸ் சாதனங்களை கொண்டு வரக் கூடாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us