UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
யு.ஜி.சி., - மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம், பாரதியார் பல்கலை சார்பில், கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி நேற்று துவங்கியது.
பல்கலை பதிவாளர் ராஜவேல் பேசுகையில், ''பேராசிரியர்களின் சீரிய முயற்சி, நேர மேலாண்மை கடைபிடித்தல், கடமை தவறாமை, மாணவர்களை நல்வழியில் நடத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அது, அவர்களுக்கு பல உயர்ந்த தகுதிகளை பெற்றுத்தரும்,'' என்றார். முன்னதாக, மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மைய இயக்குனர் சுரேஷ்பாபு வரவேற்றார். பேராசிரியர்கள் மதியழகன், கவியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

