sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி

/

டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி

டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி

டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி


UPDATED : செப் 11, 2025 12:00 AM

ADDED : செப் 11, 2025 06:23 PM

Google News

UPDATED : செப் 11, 2025 12:00 AM ADDED : செப் 11, 2025 06:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
முதியவர்களை ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாப்பது தொடர்பான ஆய்வுத் திட்டத்துக்காக டைம் இதழின் ' Kid of the Year 2025' பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜஸ்வி மனோஜ்(17) சிறுமி இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைம் இதழ், ஆண்டுதோறும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் வயதினரை கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான ' Kid of the Year 2025' என்ற விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜஸ்வி மனோஜ் என்ற சிறுமிக்கு கிடைத்துள்ளது.

இவரின் பெற்றோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தேஜஸ்வி, கலிபோர்னியாவில் பிறந்து டல்லாசில் வளர்ந்தவர்.

தேஜஸ்வி பள்ளியில் வயலின் இசைக்கலைஞராகவும், சில தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலர் ஆகவும் உள்ளார். ஏஐ அல்லது சைபர் பாதுகாப்பு தொடர்பான கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் நோக்கத்தில் உள்ளார்.

அவரது தாத்தா சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதியவர்களை பாதுகாக்கும் வகையிலான 'Shield Seniors' என்ற என்ற திட்டத்தில் ஆய்வு நடத்தினார். இதனை பாராட்டியே டைம் இதழ் அவரை கவுரவித்துள்ளது. முன்னதாக, டெக்சாசில் டிஜிட்டல் கட்டமைப்பு ஏற்படுத்துதல் தொடர்பான மாநாட்டிலும் அவர் கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us