8ம் வகுப்பு பாஸ் செய்தால் ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்!
8ம் வகுப்பு பாஸ் செய்தால் ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்!
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:32 AM

திருப்பூர்:
திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு ஆர்வமுள்ள மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஒன்பது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர், விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மாணவ, மாணவியர் மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான 'இண்டஸ்டரி 4.0' மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேரலாம்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தரமான பயிற்சி, மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய் வழங்கப்படும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு 'டூல்கிட்' இலவசமாக வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்து பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அரசின் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.
முழுமையாக பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழில்பழகுனர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவியர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், ஐ.டி.ஐ.,க்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 97908 38912, 95002 33407 என்ற எண்ணில் அழைக்கலாம்.

