மேற்கு வங்கத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி!
மேற்கு வங்கத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி!
ADDED : செப் 12, 2025 09:24 PM

பிர்பும்: மேற்கு வங்கத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பிர்பும் மாவட்டத்தில் பகதூர்புர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. குவாரியில் எப்போதும் போல தொழிலாளர்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக,பெரிய பாறைகள் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் கூக்குரல்களை கேட்ட அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பலர் படுகாயம் இருந்த நிலையில் அவர்களை மீட்ட மக்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணியில் இறங்கினர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் உடல்களை அவர்கள் கைப்பற்றினர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் பேசுகையில், பாறைகள் சரிந்து விழுந்தது எப்படி என்று தெரியவில்லை. இங்கு சட்டவிரோத கல் குவாரிகள் இயங்கி வந்ததா என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.