ADDED : டிச 28, 2025 07:48 AM

பார்லி., வளாகத்தில் உள்ள கட்டடங் கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நிர்வாகத்தில் வருகின்றன. எதிர்க்கட் சிகளின் போராட்டம், தர்ணா, லோக்சபாவில் கூச்சல், குழப்பம் என, சபா நாயகருக்கு ஒருபக்கம் பிரச்னைகள். இப்போது புதிதாக வேறு சில விவகாரங்களும் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாம்.
பார்லி., வளாகத்தில் குரங்குகள் அதி கம். புதிய கட்டடம், பழைய கட்டடம் என, எங்கும் அவை சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. துணை ராணுவத்தினர் தான் பார்லிமென்டிற்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இவர்கள் அதிகமாக இருப்பதால், குரங்கு களின் நடமாட்டம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும், பார்லி., கேன்டீன் பக்கம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என, குரங்குகள் வருகின்றன. இதை தடுக்கவே முடியவில்லை.
குரங்குகள் போதாதென்று, பூனைகளும் சபாநாயகருக்கு இப்போது பிரச்னையை ஏற்படுத்தி உள்ளன. பார்லி., கேன்டீனில் எம்.பி.,க்கள் சாப்பிடும் போது குறுக்கும், நெடுக்குமாக பூனைகள் நடமாடுகின்றன. மீதமுள்ள தின்பண்டங்களை சாப்பிடத்தான் வருகின்றன.
திரிணமுல் காங்., - எம்.பி., ஒருவர், லோக்சபாவில், 'இ -சிகரெட்' புகைத்தார் என புகார் வந்துள்ளது. அதற்கு தீர்வு காண்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் குரங்குகளும், பூனைகளும் சபாநாயகர் ஓம் பிர்லாவின் துாக்கத்தை கெடுத்துள்ளன.
ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்த தலைவலியெல் லாம் கிடையாது. காரணம், பார்லி., முழுதுமே ஓம் பிர்லா வின் கண்காணிப்பில் தான் உள்ளது.

