ADDED : ஜன 02, 2026 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரள மாநிலம் பாதுகாப்பு, ரம்யமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை கொண்ட உலகளாவிய சுற்றுலா ' ஹாட்ஸ் பாட்' ஆக மாறி வருகிறது.
2025 ஜன. 1 - செப்.30 வரையிலான ஒன்பது மாதங்களில் உள்நாட்டைச் சேர்ந்த 1,80,29,553, வெளிநாடுகளைச் சேர்ந்த 5,67,117 என மொத்தம் 1,85,96,670 பயணிகள் வருகை தந்து சாதனையை ஏற்படுத்தியது. இதே கால அளவில் 2024யை விட 13.06 இது சதவீதம் அதிகமாகும்.
ரோடுகளின் கட்டமைப்புகள் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு உள்ளது.
மத்திய அரசின் ரூ.378 கோடி நிதியில் இருவழி சாலையாக அமைக்கப்பட்ட ரோடு, பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே செல்லும் அழகை ரசிக்க என பயணிகள் வந்து செல்கின்றனர் .

