UPDATED : ஆக 03, 2025 03:00 AM
ADDED : ஆக 03, 2025 02:54 AM
மூணாறு:கேரளாவில் ஆக.6 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது கொட்டிவருகிறது. கடந்த வாரம் தீவிரமடைந்த பருவ மழை கடந்த மூன்று நாட்களாக குறைந்தது. இந்நிலையில் ஆக.6 வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால், பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
அதன்படி இன்று இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப் பட்டது.
நாளை இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், ஆக.5ல் இடுக்கி, திரு வனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், ஆக.6ல் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
எல்லோ அலர்ட் இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், நாளை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு , ஆக.5ல் கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், ஆக.6ல் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், வயநாடு, கண்ணுார் ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மி.மீ., வரையும், 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இடுக்கிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
இரவு போக்குவரத்துக்கு தடை
கொச்சி-- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்
சாலையில் கேப் ரோடு வழியாக இரவு போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டத்தில் இன்று முதல் ஆக.6
வரை கன மழைக்கான' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதனால் கொச்சி-
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவு
ஏற்படவும், பாறைகள் உருண்டு விழவும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே
பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக ஆக.6 வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை
விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. கேப் ரோட்டில் பகலில் வாகனங்களை
நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.