எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கிறது ஹெச்.ஏ.எல்.,
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கிறது ஹெச்.ஏ.எல்.,
ADDED : செப் 11, 2025 12:16 AM

பெங்களூர்: எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம், 'இஸ்ரோ, ஹெச்.ஏ.எல்., இன்ஸ்பேஸ்' மற்றும் 'நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' நிறுவனங்களுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்க முடிவு செய்தது.
இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக வைத்து செயல்படும் ஹெச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இன்ஸ்பேஸ் எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், என்.எஸ்.ஐ.எல்., எனப்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து, பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான, தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் நான்கு நிறுவனங்களுக்கு இடையே, பெங்களூரில் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு, சிறிய ரக ராக்கெட் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமத்தை வழங்குகிறது.
உள்நாடு மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் எஸ்.எஸ்.எல்.வி., உற்பத்திக்கு ஹெச்.ஏ.எல்., பொறுப்பாகும்.
இதன்படி, 500 கிலோவுக்கும் குறைவாக உள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.