காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தாராலி வரை; உயிர் பலி வாங்கும் மேகவெடிப்பு துயர சம்பவங்கள்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தாராலி வரை; உயிர் பலி வாங்கும் மேகவெடிப்பு துயர சம்பவங்கள்!
ADDED : ஆக 05, 2025 07:03 PM

புதுடில்லி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் மேக வெடிப்புகள் பல பேரழிவு நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் விபரம் பின்வருமாறு:
* இமயமலையில் அமைந்துள்ள காளி பள்ளத்தாக்கு, குமாவோன் (ஆகஸ்ட் 1998). இந்த மேக வெடிப்பு சம்பவத்தில், 250க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
* குந்தா, ருத்ரபிரயாக், உத்தராகண்ட் மாநிலம் (ஆகஸ்ட் 17, 1979)- 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
* மும்பை (ஜூலை 2005)- 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
* லே, லடாக் (ஆகஸ்ட் 2010)- 500க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
* உத்தர்காசி (செப்டம்பர் 2012)- 45 பேர் உயிரிழந்தனர்.
*காஷ்மீர் பள்ளத்தாக்கு (செப்டம்பர் 2014)- 200 பேர் உயிரிழந்தனர்.
*சாமோலி, உத்தராகாண்ட் (ஆகஸ்ட் 16, 1991)- 26 பேர் உயிரிழந்தனர்.
*ருத்ரபிரயாக், உத்தரகாண்ட் (ஆகஸ்ட் 11-19, 1998)- 103 பேர் இறந்தனர்.
* அரகோட், மோரி, உத்தர்காசி (ஆகஸ்ட் 18, 2019)- 21 பேர் உயிரிழந்தனர்.
* கேதார்நாத் (ஜூன் 16-17, 2013) : 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் போயினர்.
*மண்டி, ஹிமாச்சலப் பிரதேசம் (2025)- பல மேக வெடிப்பு சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காணாமல் போயினர்.
* இன்று (ஆகஸ்ட் 5) - உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் நான்கு பேர் உயிரிழந்தனர்.