ADDED : ஆக 03, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த ஆண்டு நவ.,8ல் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதுடில்லியில் உள்ள தலைமை நீதிபதிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான 5, கிருஷ்ணமேனன் மார்க் வீட்டை காலி செய்ய வேண்டும்.
ஆனால், சந்திரசூட் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னும் அந்த வீட்டில் தங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. தன் மாற்றுத்திறனாளி மகள்கள் தங்குவதற்கு ஏற்ற வீடு கிடைக்காததால் தாமதம் ஆவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி பங்களாவை சந்திரசூட் காலி செய்ய உத்தரவிடும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் ஜூலை 1ல் கடிதம் எழுதியது.
இந்நிலையில், சந்திரசூட் நீதிபதிக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.