நாட்டிலேயே முதன்முறை : நிலுவை வழக்குகைளை விசாரிக்க புதிய நடைமுறை
நாட்டிலேயே முதன்முறை : நிலுவை வழக்குகைளை விசாரிக்க புதிய நடைமுறை
ADDED : டிச 14, 2025 12:43 AM

ஜெய்ப்பூர்: நிலுவையில் இருக்கும் வழக்குளை விரைவில் முடிக்க ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்
புதிய நடைமுறையை அமல் படுத்த முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நகரில் மேற்குமண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் சுப்ரீம்கோர்ட்டின் நீதிபதிகள், ராஜஸ்தான், குஜராத், ம.பி.,மஹா., உள்ளி்ட்ட மாநிலங்களை சேர்ந்த ஐகோர்ட், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி சூர்ய காந்த தலைமை வகித்தார்.
மாநாட்டில் நீதிமன்ற செயல்பாடுகளை நவீனமயமாக்குதல், டிஜிட்டல் நீதிமன்ற
உள்கட்டமைப்பு,நீதிமன்ற செயல்முறைகளில் ஏஐ பயன்பாடு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறைக்கும் வகையில் புதிய நடைமுறை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் இனி ஒவ்வொரு
மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கும்.நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக கூடுதல்
வேலை நாட்கள் சேர்க்கப்படும். இதனால் நீதிமன்றத்தின் பணி நாட்கள் எண்ணிக்கை 210
நாட்களில் இருந்து 230 நாட்களாக அதிகரிக்கும்.
இதனையடுத்து நாட்டிலேயே முதன் முறையாக நீதிமன்ற பணி நாட்களை அதிகரித்த முதல்
மாநிலமாக ராஜஸ்தான் ஐகோர்ட் திகழ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முயற்சியின் முன்னோட்டமாக மாநிலத்தின் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் நகரங்களில் உள்ளமாஜிஸ்திரேட் மட்டத்தில்தலா ஒரு மாலை நேர நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும், இத்திட்டம்தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி சர்மாமற்றும் நீதிபதி புஷ்பேந்திர சிங் பாட்டி ஆகியோர்அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஒருவர் கூறுகையில் ஒரு சிறிய சதவீத வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்பட்டாலும், அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இருக்கும். இது ஒரு தொடக்கமாகக் கருதப்பட வேண்டும், மேலும் இது போன்ற பல நடவடிக்கைகள் தேவை என கூறினார்.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்குகளின் நிலுவையைக்
குறைப்பதற்காக பணி நாட்களை அதிகரிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அனைத்து உயர்
நீதிமன்றங்களுக்கும் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

