உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா கப்பல் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா கப்பல் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ADDED : ஜன 01, 2026 06:46 AM

புதுடில்லி: ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா' கப்பல் குழுவினரின் புகைப்படத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் காட்டும் உற்சாகம் மனதை நெகிழ செய்வதாகவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள பாய்மர கப்பலான ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா, குஜராத்தில் இருந்து, ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இவர்களது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா குழுவிடமிருந்து, இந்த புகைப்படத்தை பெறுவதில் மகிழ்ச்சி. அவர்கள் காட்டும் உற்சாகத்தை பார்ப்பது மனநிறைவை தருகிறது. 2026ம் ஆண்டில் அடியெடுத்து நாம் வைக்கும் நேரத்தில், கடலில் பயணம் மேற்கொண்டு வரும், அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். அவர்களின் மீதமுள்ள பயணமும், மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக அமையட்டும். இவ்வாறு அவர் வாழ்த்தி உள்ளார்

