திருமண அறிவுரை எனக்கும் பொருந்தும்! பீஹார் யாத்திரையில் ராகுல் 'ஜோக்'
திருமண அறிவுரை எனக்கும் பொருந்தும்! பீஹார் யாத்திரையில் ராகுல் 'ஜோக்'
ADDED : ஆக 24, 2025 09:43 PM

பாட்னா: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேஜஸ்வியின் அறிவுரை எனக்கும் பொருந்தும் என்று காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.
காங்., தலைவர் ராகுலும், லாலு மகன் தேஜஸ்வியும் பீஹாரில் ஓட்டு அதிகார யாத்திரை செல்கின்றனர். 'பிரதமர் மோடிக்கு அனுமனாக இருப்பேன் என்று கூறும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது தான் சரியான நேரம்' என்று லாலு மகன் தேஜஸ்வி கூறினார்.
இதைக் கேட்டதும் பேசிய 55 வயது ராகுல், ''இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். தேஜஸ்வியின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்,'' என்று கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.
2 ஆண்டுகளுக்கு முன் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பேசிய லாலு, 'ராகுல் திருமணம் செய்ய வேண்டும். அது அவரது தாயார் விருப்பம். நாங்களும் அவரை மாப்பிள்ளையாக பார்க்க விரும்புகிறோம்,' என்றதை நினைவுகூரும் வகையில் ராகுல் இவ்வாறு பேசினார்.