ADDED : செப் 12, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழிக்கோடு; கேரளாவில் மூளை தின்னும் அமீபா நோய்த்தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மூளை தின்னும் தொற்று எனப்படும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்த 10 பேர், கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், மூளைக்காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த ஆக.,9ல் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டம் செலம்பரா பகுதியை சேர்ந்த சாஜி,47, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.