பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடத்தில் 5 திருத்தங்கள் செய்தது என்.சி.இ.ஆர்.டி.,
பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடத்தில் 5 திருத்தங்கள் செய்தது என்.சி.இ.ஆர்.டி.,
ADDED : ஏப் 06, 2024 12:14 AM

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பின் அரசியல் அறிவியல் பாடத்தில், மூன்று முக்கியமான திருத்தங்களை என்.சி.இ.ஆர்.டி., செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைக்கிறது.
இதில், கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2014 முதல் இதுவரை நான்காவது முறையாக பாடப் புத்தகங்களில் என்.சி.இ.ஆர்.டி., மாற்றங்களை செய்துள்ளது.
இம்முறை, சி.பி.எஸ்.இ.,க்கான பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடத்தில், மிக முக்கியமான ஐந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, அரசியல் அறிவியல் பாடம் 8ல், அயோத்தி குறித்த பாடத்தில் ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுஉள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், 1989 லோக்சபா தேர்தலுக்கு பிறகான காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990ம் ஆண்டு மண்டல் கமிஷன், 1991 துவங்கிய பொருளாதார சீர்திருத்தம், ராஜிவ் படுகொலை உள்ளிட்ட பாடங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியலில் ஏற்பட்டுள்ள தற்கால மாற்றத்துக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

