ADDED : செப் 14, 2025 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஏறுமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில்
சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்து, 81,905 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 25,114 புள்ளிகளாக இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பை அறிவிக்கலாம் எனும் எதிர்பார்ப்பில், சர்வதேச சந்தையில் காணப்பட்ட சாதகமான நிலை தாக்கம் செலுத்தியது. இந்திய - அமெரிக்க
வர்த்தக வரி பேச்சுவார்த்தையும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு நிதி கழக
முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.