வீட்டு வைத்தியங்களை தாண்டி யோசிப்போம்: முடி உதிர்வுக்கு சரியான தீர்வு எது?
வீட்டு வைத்தியங்களை தாண்டி யோசிப்போம்: முடி உதிர்வுக்கு சரியான தீர்வு எது?
UPDATED : டிச 26, 2025 07:10 PM
ADDED : டிச 26, 2025 06:04 PM

ஹேர் பால் (Hair fall) என்பது திடீரென்று ஒரு பெரிய பிரச்னையாகத் தொடங்குவதில்லை. அது மிக அமைதியாகத்தான் ஆரம்பிக்கும். தலையணை உறையில் சில முடிகள், வகிடு கொஞ்சம் அகலமாவது, அல்லது முன்னாடி இருந்தது போல ஹேர்லைன் (hairline) இல்லாமல் போவது.
கோல்கட்டாவைச் சேர்ந்த ஆனி (28) மற்றும் டில்லியைச் சேர்ந்த பாவ்னா (40) ஆகியோருக்கு, இந்த சிறிய அறிகுறிகள் மெல்ல மெல்ல பெரிய கவலையாக மாறின. இவர்களின் கதை, இன்று முடி உதிர்வால் அவதிப்படும் பல இந்தியப் பெண்களின் கதையைப் போன்றதுதான்.
ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் நகர்ப்புறங்களில் முடி உதிர்வது சாதாரணமாகிவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலரைப் போலவே, இவர்களும் ஆரம்பத்தில் வீட்டு வைத்தியங்களையும், பலவிதமான எண்ணெய் வகைகளையும் முயற்சி செய்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கிளினிக்கல் ட்ரீட்மென்ட் தேவை என்பதை உணர்ந்தார்கள்.
வீட்டு வைத்தியம் கைவிடப்படும் போது
ஆனி மற்றும் பாவ்னா இருவரும், முடி உதிர்வின் ஆரம்ப அறிகுறிகள் தெளிவாக இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனி, தான் தலைக்கு குளித்தபோது கையில் முடி கொத்தாக வந்ததை நினைவு கூர்கிறார். 'கையில் முடியைப் பார்த்ததும் எனக்கு பகீர் என்றது. அடுத்து என்ன பண்றதுன்னே தெரியல. ஆன்லைனில் பார்த்த எல்லா கிச்சன் ரெமெடிஸையும் (kitchen remedies) ட்ரை பண்ணி பாத்தேன். ஆனா எதுவுமே வேலை செய்யல. அதெல்லாம் பொதுவான வைத்தியம், உண்மையான ட்ரீட்மென்ட் கிடையாது.' என்றார்.
பாவ்னாவும் இதே குழப்பத்தில்தான் இருந்தார். 'தலைக்கு குளிச்சுட்டு சீப்புல பாத்தா நிறைய முடி வரும். கறிவேப்பிலை, வெங்காய சாறு... எல்லாம் ட்ரை பண்ணேன், ஆனா ஒன்னும் மாறல.' எந்த ஹேர் சீரம் (hair serum) பயன்படுத்துவது என்று தெரியாமல் சுமார் ஒரு மாதம் குழப்பத்திலேயே இருந்ததாக அவர் கூறுகிறார்.
இவர்களின் அனுபவம் மருத்துவர்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறது. வீட்டு வைத்தியம் பாதுகாப்பானதாகத் தோன்றலாம், ஆனால் அது நாள்பட்ட முடி உதிர்வை சரிசெய்வது கடினம்.
சரியான அறிவியல் தீர்வை நோக்கி
இவர்கள் இருவரும் எடுத்த முடிவு ஒரே நாளில் நடந்தது அல்ல. பல மாதங்கள் வீட்டு வைத்தியம் மற்றும் டாக்டர்களைப் பார்த்த அயர்ச்சியால் எடுத்த முடிவு அது. ஆனி, மருந்துகள் பற்றி தானே ரிசர்ச் செய்யத் தொடங்கினார். அப்போதுதான் ஆன்லைனில் Bontress பற்றி அவருக்குத் தெரிந்தது.
ஆனி கூறுகையில், ''நான் ஒரு பிரபலமான பார்மா கம்பெனி ப்ராடக்டை தேடிக்கிட்டு இருந்தேன். சும்மா விளம்பரத்துக்காக இல்லாம, உண்மையான ட்ரீட்மென்ட்காக இருக்கணும்னு நெனச்சேன்'' என்றவர், அதில் உள்ள பொருட்களை (ingredients) செக் செய்து, கூகுளில் தேடி, ரிவ்யூஸ் படித்த பிறகே முடிவு செய்ததாக கூறுகிறார்.
பாவ்னாவுக்கு, அவரது உறவினர் Bontress Pro+ பற்றி சொன்னார். பாவ்னா கூறுகையில், ''முடி வளர்றதுக்கு தேவையான சயின்டிபிக் பொருட்கள் இதுல இருக்குன்னு என் கசின் சொன்னாங்க. Nykaa-வில் இருந்த ரிவ்யூஸ் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தன. நிறைய பேர் தங்களுக்கு 'பேபி ஹேர்' (baby hair) வளர்வதாகவும், முடி கொட்டுவது குறைந்திருப்பதாகவும் எழுதியிருந்தார்கள். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது'' என்றார்.
மாற்றம் மெதுவாக நிகழும் போது
இருவரும் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. முடி கொட்டுவது நிற்க 6-8 வாரங்களும், புதிய முடி வளர குறைந்தது 3 மாதங்களும் ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனிக்கு, நெற்றியின் ஓரத்தில் மெல்லிய புதிய முடிகள் வளரத் தொடங்கின.
'அம்மா என்னைப் பார்த்து, 'உனக்கு நிறைய குட்டி முடி வளருதுடி'னு சொன்னாங்க. அப்போதான் எனக்கு இது வேலை செய்யுதுன்னு நம்பிக்கை வந்தது.' எனக்கூறிய ஆனி, தினமும் மறக்காமல் Bontress பயன்படுத்தினார்.
பாவ்னாவின் அனுபவமும் அப்படித்தான் இருந்தது. 'ஒன்றரை மாசத்துக்கு அப்புறம், எனக்கு பேபி ஹேர் தெரிஞ்சது. ஆனா எனக்கு டவுட்டா இருந்தது. பார்லருக்கு போனப்போ அந்த பொண்ணுகிட்ட செக் பண்ண சொன்னேன். அவங்க, 'ஆமா மேடம், குட்டி முடி வளருது'னு சொன்னாங்க. அது எனக்கு சந்தோஷமா இருந்தது' என்றார்.

படம்: Bontress Pro+ உடன் பாவ்னாவின் முடி வளர்ச்சி பயணம்
யாரும் பேசாத மன அழுத்தம்
முடி வளர்ச்சியைத் தாண்டி, இருவருமே மனரீதியாக ஒரு மாற்றத்தை உணர்ந்தார்கள். முடிவு தெரியும் வரை இருந்த மன உளைச்சலை பற்றி ஆனி கூறுகையில், ''அது வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் என்னால நிம்மதியா தூங்க முடிஞ்சது. அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கும்'' என்றார்.
பாவ்னா கூறுகையில், ''மற்ற சீரம் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி , காசு செலவு பண்ணி ரிசல்ட் வரலைன்னா கஷ்டமா இருக்கும். Bontress வாங்குறப்போ, இது வேலை செய்யுமான்னு சந்தேகமா தான் இருந்தது. ஆனா மாற்றம் தெரிஞ்சப்போ, ரொம்ப நிம்மதியா இருந்தது'' என்றார்.
இன்றைய காலக்கட்டத்தில், பல பெண்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் DIY குறிப்புகளைத் தாண்டி, அறிவியல் பூர்வமான Bontress போன்ற தீர்வுகளை நாடுகிறார்கள் என்பது இவர்களின் கதையிலிருந்து தெரிகிறது.
ஆனி சொல்வது போல, 'சிகிச்சைன்னு வரும்போது அதுக்கு டைம் எடுக்கும். மேஜிக் மாதிரி நடக்காது. ஆனா ட்ரீட்மென்ட்காக தயாரிச்ச பொருள் கண்டிப்பா வேலை செய்யும்'. பாவ்னாவின் அட்வைஸும் அதுதான். அதாவது, 'பயப்படாம, சயின்ஸ் படி வேலை செய்யுற ஒரு ப்ராடக்டை சூஸ் பண்ணுங்க' என்றார்.

