ADDED : டிச 26, 2025 01:15 AM

புதுடில்லி: மின்வாகனத் தயாரிப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுமினியத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதிகளவில் உற்பத்தி செய்யவும்; இலக்கை எட்டவும், பொதுத்துறை நிறுவனமான 'நால்கோ'வை மத்திய சுரங்கத்துறை செயலர் பியுஷ் கோய ல் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நால்கோ நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து, ஒடிசா மாநில தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நால்கோ நிறுவனம், அலுமினிய தயாரிப்புக்கான பாக்ஸைட் வெட்டியெடுத்தல், சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுகிறது.
அலுமினிய தேவை அதிகரிப்பால், ஒடிசாவின் தமஞ்சோடியில் சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு வளாகம், அங்குலில் உள்ள உருக்காலை மின் வளாகத்தில் இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அலுமினிய உற்பத்தி, விரிவாக்க பணிகளுக்காக 35,000 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக நால்கோ அறிவிப்பு நிறுவனத்தின் உலோகத்தை உருக்கும் திறனை ஆண்டுக்கு கூடுதலாக 5 லட்சம் டன் அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு

