'பின்டெக்' சிட்டியில் அமைகிறது ஐந்து நட்சத்திர ஹோட்டல்
'பின்டெக்' சிட்டியில் அமைகிறது ஐந்து நட்சத்திர ஹோட்டல்
ADDED : செப் 15, 2025 11:54 PM

சென்னை : சென்னை நந்தம்பாக்கம், 'பின்டெக்' சிட்டியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைக்க, ஏக்கர் 65 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் 3 ஏக்கரை விற்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரை, தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம் அமைத்து வருகிறது. முதல் கட்டமாக, 83 கோடி ரூபாய் செலவில், 56 ஏக்கர் தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு, உள்கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை அலுவலகம் அமைக்க, அங்குள்ள தொழில் மனைகள், 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒதுக்கப்படுகின்றன. பின்டெக் சிட்டியில் கூட்டங்கள் நடத்தவும், பொழுதுபோக்கு வசதிக்காகவும் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ஏக்கருக்கு 65 கோடி ரூபாய் என மனை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, 3 ஏக்கரை விற்க டிட்கோ முடிவு செய்துள்ளது.