'ரூ.5 முதல் 20 வரையிலான பொருட்களின் விலையை மாற்ற போவதில்லை': நுகர்பொருட்கள் தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்
'ரூ.5 முதல் 20 வரையிலான பொருட்களின் விலையை மாற்ற போவதில்லை': நுகர்பொருட்கள் தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்
UPDATED : செப் 15, 2025 04:54 PM
ADDED : செப் 14, 2025 11:25 PM

புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யை குறைத்தாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 5 முதல் 20 ரூபாய் வரையிலான பிஸ்கட்டுகள், சோப்பு மற்றும் பற்பசை ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பில்லை என, மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளிடம், நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளதாவது:
இந்தியாவில் மக்கள் ஒரே விலையில் பொருட்களை வாங்கி பழகி உள்ளனர். எனவே, பொருட்களின் விலையை 18 அல்லது 9 ரூபாய் என குறைப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், பரிவர்த்தனையை கடினமாக்கும். இதற்கு பதிலாக, விலையை மாற்றாமல், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்களை பெறும் வகையில், பொருட்களின் அளவை அதிகரித்து தர இருக்கிறோம்.
உதாரணமாக, 20 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டால், விலையை குறைக்கா மல், அதே விலைக்கு கூடுதல் பிஸ்கட்டுகள் வழங்க உள்ளோம்.
விலையை மாற்றாமல், கூடுதல் அளவை வழங்குவதால், ஜி.எஸ்.டி., குறைப்பின் நன்மைகளை நுகர்வோரின் வாங்கும் நடத்தையை மாற்றாமல் கடத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'விலையை 18 ரூபாய், 9 ரூபாய் என குறைப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், பரிவர்த்தனையை கடினமாக்கும்'