ADDED : செப் 09, 2025 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கேப்பிடல்மைண்டு மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அதன் முதல் திட்டமான, 'கேப்பிடல்மைண்டு பிளக்ஸி கேப்' பண்டின் சொத்து மதிப்பு, 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 18ம் தேதியன்று இந்த திட்டம் துவக்கப்பட்ட நிலையில், வெறும் 35 நாட்களில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு, 5,100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும், 1,800-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களும் மற்றும் 1,600 எஸ்.ஐ.பி., பரிவர்த்தனைகளும் உதவியாக இருந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.