
எச்.டி.எப்.சி., வட்டி குறைப்பு
தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., பேங்க், நிதிச் செலவு அடிப்படையிலான கடன் விகிதமான எம்.சி.எல்.ஆரில் 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, மூன்று மாத கடன் விகிதம் 8.60 சதவீதத்தில் இருந்து, 8.55 சதவீதமாகியுள்ளது. ஆறு மாத கடன் விகிதம் 8.70 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், வீட்டுக் கடன் வட்டி சிறிது குறையும்.
எச்.ஏ.எல்., பெல் பங்கு விலை உயர்வு
பாதுகாப்பு அமைச்சகம், கடந்த 5ம் தேதி ராணுவ நவீனமய திட்டத்தை வெளியிட்ட நிலையில், ராணுவ தளவாட தயாரிப்பு தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வணிகத்தில் விலை உயர்ந்தன. எச்.ஏ.எல்., கொச்சி ஷிப்யார்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகபட்சம் 2.50 சதவீதம் வரை உயர்வு கண்டன.
புதிய பிளெக்ஸி கேப் பண்டு
வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்டு, முதல்முறையாக பிளெக்ஸி கேப் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வாயிலாக திரட்டப்படும் தொகை லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில், நிறுவனத்தின் அடிப்படை, மதிப்பு மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்யப்பட உள்ளது. புதிய பண்டு திட்டத்துக்கு, செப்., 24ல் துவங்கி அக்., 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.