/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரை பசுமையாக்க ரூ.147 கோடி நிதி
/
பெங்களூரை பசுமையாக்க ரூ.147 கோடி நிதி
ADDED : செப் 13, 2025 04:37 AM
பெங்களூரு: பெங்களூரில் காற்று மாசுபடுவதை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மாநில அரசு 147 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
பெங்களூரில் இயக்கப்படும் அதிக வாகனங்க ளால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை குறைக்க, சுற்றுச்சூழலை மேம்படுத்த என்.சி.ஏ.பி., எனும் தேசிய துாய்மையான காற்று திட்டத்தின் கீழ், மாநில அரசு 147.40 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது .
இந்த நிதி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், பி.எம்.டி.சி., பொதுப்பணி துறை, தோட்டக்கலைத்துறை, பெஸ்காம், காலநிலை நடவடிக்கை குழுவுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, ஹெப்பால், காந்திநகர், மல்லேஸ்வரம், புலிகேசிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மேம்படுத்தப்படும். பேட்ராயனபுரா, மஹாதேவபுரா, யஷ்வந்த்பூர், பொம்மனஹள்ளி, எலஹங்கா ஆகிய பகுதிகளில் புதிதாக பூங்காக்கள் அமைக்கப்படும்.
பி.எம்.டி.சி.,யில் எலக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பேட்ராயனபுரா, மஹாதேவபுரா, எலஹங்கா ஆகிய சட்டசபை தொகுதிகளில் புதிதாக எலக்ட்ரிக் சார்ஜிங் பாயின்டுகள் அமைக்கப்படும். பாகலுார் குப்பை கிடங்கில் குப்பையை அறிவியல் முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, புதிய பூங்காக்கள் மூலம் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குப்பையை எரிப்பதால் காற்று மாசடைவதை தடுக்க அறிவியல் முறைகளில் குப்பையை அகற்றுவது போன்றவற்றால் பெங்களூரில் காற்று மாசுபாடு குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.