/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிராக்டரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
/
டிராக்டரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
டிராக்டரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
டிராக்டரில் கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 13, 2025 04:38 AM

உடுப்பி: டிராக்டரில் கடத்திச் செல்லப்பட்ட 65 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடுப்பி நகரின், கின்னிமூலி ஜங்ஷன் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. எனவே நேற்று காலை போலீசார் தடுப்புகள் அமைத்து, வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த வழியாக டிராக்டர் வேகமாக வந்தது. இதை கவனித்த போலீசார், டிராக்டரை சோதனை நடத்தினர். சாக்கு மூட்டையில் இருந்த 65 கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
அ தை கடத்தி வந்த கோபால ரெட்டி, கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கணேஷ், மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவை சேர்ந்தவர். கோபால ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவர்.
இதுகுறித்து, உடுப்பி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். 20 லட்சம் மதிப்புள்ள டிராக்டர், இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான இருவரும், உடுப்பி நகருக்கு வரும் சுற்றுலா பயணியருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கஞ்சா விற்பனை செய்ய முயற்சித்தது, விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.