/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் வரவேற்பேன்' விஜயேந்திராவுக்கு பசனகவுடா எத்னால் சவால்
/
'மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் வரவேற்பேன்' விஜயேந்திராவுக்கு பசனகவுடா எத்னால் சவால்
'மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் வரவேற்பேன்' விஜயேந்திராவுக்கு பசனகவுடா எத்னால் சவால்
'மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் வரவேற்பேன்' விஜயேந்திராவுக்கு பசனகவுடா எத்னால் சவால்
ADDED : டிச 16, 2025 05:17 AM

'பெலகாவி: ''பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்; முழு கதையையும் நீதிமன்றத்தில் விவரிப்பேன்,'' என எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
'பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால், தொடர்ந்து என் மீதும், என் குடும்பத்தினர் மீது அவதுாறு பரப்பி வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்' என்று விஜயேந்திரா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பெலகாவி மாவட்டம், சிக்கோடியில் எத்னால் அளித்த பேட்டி:
பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். முழு கதையையும் நீதிமன்றத்தில் விவரிப்பேன்.
விஜயேந்திராவும், சிவகுமாரும் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளனர். இது சாத்தியமாகாது. இவர்களுக்கு மேல், தலைவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் கூட்டணி அரசு அமைய கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. தற்போதைக்கு அக்கட்சியில், யார் முதல்வர் ஆவர் என்ற கேள்வி மட்டுமே உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே கர்நாடகாவின் வட மாவட்டங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இரண்டு நாள் விவாதத்தில் வட மாவட்டங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. முதலில் வட மாவட்டங்களின் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும். இதற்காக போராடி வருகிறோம்.
நான் மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்புவேன் என்று எங்கும் சொன்னதில்லை. எனக்கு தகுதியான பதவி வழங்கினால் மட்டுமே, பா.ஜ.,வில் இணைவேன்.
அதானியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனக்கு ஒருங்கிணைந்த கர்நாடகா தான் தேவை; வட கர்நாடகா என தனி மாநிலம் தேவையில்லை. எங்களுக்கு கிடைத்த அநீதிக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.
சிலர் அதானி, கோகாக், சிக்கோடி என மூன்று மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இது குறித்து விரிவாக ஆய்வு செய்ய, கமிட்டி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

