/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே நம்பரில் 2 பஸ்கள்: தங்கவயலில் பறிமுதல்
/
ஒரே நம்பரில் 2 பஸ்கள்: தங்கவயலில் பறிமுதல்
ADDED : டிச 16, 2025 05:16 AM

தங்கவயல்: ஒரே நம்பரில் 2 பஸ்கள் இயங்கியதை தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மடக்கி பிடித்து சிறைப்பிடித்துள்ளனர். டிரைவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
ஆந்திர மாநிலம், வி.கோட்டாவில் இருந்து தங்கவயலின் கம்மசந்திராவில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஜி.எம்.ஜி., என்ற பெயரில் 2 கான்ட்ராக்ட் பஸ்கள் ஒரே பதிவு எண்ணுடன் வந்துள்ளது.
இதனை தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., பிரேக் இன்ஸ்பெக்டர்கள் பூஜா, முனிகிருஷ்ணா ஆகியோர் பார்த்துள்ளனர்.
பஸ்சை நிறுத்தி, அதில் பயணித்த பயணியரை கீழே இறக்கியுள்ளனர். டிரைவர்களிடம் பஸ்களின் ஆவணங்களை கேட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சோதனை செய்த பின், கையொப்பம் இடும்படி கேட்டுள்ளனர். கையொப்பம் போடாமல் டிரைவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த இரண்டு பஸ்களிலும் கே.எல்., - 05 ஆர்.7522 என்ற ஒரே எண் கொண்ட நம்பர் பிளேட் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பஸ்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவலை பெங்களூரில் உள்ள போக்குவரத்துத் துறை மாநில இணை இயக்குனருக்கு தெரிவித்தனர். மாநில போக்கு வரத்துத்துறை இணை இயக்குனர் காயத்ரி தேவி நேரில் வந்து பார்வையிட்டார்.
அதன் பின் அவர் கூறுகையில், ''இரு பஸ்களிலும் ஒரே பதிவு எண் இருந்தது. இது கர்நாடக மாநில பதிவில் காணப்பட்டன. ஆயினும் பஸ்கள் கே.எல்., என கேரள மாநில பதிவில் இருந்தது. இதன் உரிமையாளர்கள், தங்களுடையது தான் என்று உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க முன் வரவேண்டும்.
''அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும். வர தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு, மோசடி குறித்து விசாரிக்கப்படும். இந்த பஸ்களுக்கு வரி மற்றும் காப்பீடு தொகை செலுத்தவில்லை. விபத்தில் சிக்கிக் கொண்டால் காப்பீடும் கேட்க முடியாது. இதற்காக, சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

