/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு? சபாநாயகருக்கு அசோக் கடிதம்
/
சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு? சபாநாயகருக்கு அசோக் கடிதம்
சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு? சபாநாயகருக்கு அசோக் கடிதம்
சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு? சபாநாயகருக்கு அசோக் கடிதம்
ADDED : டிச 16, 2025 05:19 AM

பெலகாவி: 'பெலகாவியில் நடந்து வரும், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை, மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, சபாநாயகர் காதருக்கு அசோக் எழுதிய கடிதம்:
டிசம்பர் 8ம் தேதி முதல் 19 வரை, சட்டசபை குளிர் கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. ஆனால் சில காரணங்களுக்காக, கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் குறைந்துள்ளது. இன்னாள் எம்.எல்.ஏ.,க்களான மேட்டி மற்றும் சாமனுார் சிவசங்கரப்பா மறைவினால் முறையே டிசம்பர் 8ம் தேதியும், இன்றும் (நேற்று) கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
வட மாவட்டங்கள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய பல முக்கியமான விஷயங்களுக்கு, முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்படைந்திருப்பது, அரசின் பல்வேறு துறைகளில் நிதியுதவியை பயன்படுத்துவதில் குளறுபடி உட்பட, பல விஷயங்களை பற்றி விவாதிக்க, உறுப்பினர்களுக்கு கால அவகாசம் தேவை .
ரேஷன்கார்டுகள் வழங்குவதில், அரசு அலட்சியம் காட்டியுள்ளது. கர்நாடகா முழுதும், ரேஷன்கார்டுகள் வழங்க, 3.22 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பாக்கியுள்ளன. வட மாவட்டங்கள், பெங்களூரை சேர்ந்தவர்களின் மனுக்கள் அதிகம். இது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே கூட்டத்தொடரை, மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

