/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குறை இருப்பதாக தர்ஷன் கூறவில்லை சிறையில் ஆய்வுக்கு பின் டி.ஜி.பி., தகவல்
/
குறை இருப்பதாக தர்ஷன் கூறவில்லை சிறையில் ஆய்வுக்கு பின் டி.ஜி.பி., தகவல்
குறை இருப்பதாக தர்ஷன் கூறவில்லை சிறையில் ஆய்வுக்கு பின் டி.ஜி.பி., தகவல்
குறை இருப்பதாக தர்ஷன் கூறவில்லை சிறையில் ஆய்வுக்கு பின் டி.ஜி.பி., தகவல்
ADDED : டிச 16, 2025 05:20 AM

பெங்களூரு: ''சிறையில் தனக்கு எந்த குறையும் இருப்பதாக நடிகர் தர்ஷன் கூறவில்லை,'' என்று, பரப்பன அக்ரஹாராவில் ஆய்வு செய்த சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் கூறினார்.
கர்நாடக சிறை துறை டி.ஜி.பி.,யாக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள அலோக் குமார், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று சென்றார். சிறை ஊழியர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். பின், கைதிகளின் அறைக்கு சென்று அவர்களிடமும் குறைகள், என்னென்ன அடிப்படை வசதிகள் வேண்டும் என்று கேட்டறிந்து கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பின், அவர் அளித்த பேட்டி:
பரப்பன அக்ரஹாரா சிறை பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளி வருகிறது. இந்த சிறையில் நிறைய சர்ச்சைகளும் உள்ளன.
இதனால் சிறைக்குள் சென்று ஆய்வு செய்தேன். சிறையின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அனைவரிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்து உள்ளேன்.
15 நாள் அவகாசம் சிறைக்குள் சில இடங்களில் செடி, கொடிகள் அதிகமாக படர்ந்து உள்ளன. அந்த இடத்தை சுத்தம் செய்து வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுக்கும்படி கூறி உள்ளேன். கைதிகளை சந்திக்க வந்த உறவினர்களிடம் பேசி, யாரை பார்க்க வந்தனர், என்ன வழக்கு என்று கேட்டறிந்தேன்.
நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ள சிறை பகுதிக்கும் சென்றேன். தர்ஷனை சந்தித்த போது, அவரது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை பற்றி கேட்டறிந்தேன். சிறையில் தனக்கு குறை உள்ளது என்று என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை. சிறைக்குள் நடக்கும் முறைகேடுகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கி உள்ளேன். அதன் பின்னரும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே இரவில் மாற்றம் செய்ய முடியாது.
180 வார்டன்கள் சிறைக்குள் போதை பொருள், மொபைல் போன் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய, தீவிர விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இங்கு 4,700 கைதிகள் உள்ளனர். மொத்தம் 280 வார்டன்கள் தான் உள்ளனர். இவர்களில் 100 வார்டன்கள் சிறைக்குள் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றனர்.
மீதம் 180 வார்டன்கள் தான் கைதிகளை சமாளிக்க வேண்டி உள்ளது. வார்டன்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். ஆனாலும் பணியில் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தால் தான், அவர்களுக்கு உள்ள கஷ்டத்தை அரசிடம் எடுத்து கூற முடியும்.
சிறையில் ஜாமர் கருவி பொருத்தப்படுவதால், சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மொபைல் டவன் டவர் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

