/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பேன் தொல்லையில் இருந்து கோழிகளை காக்க கரைசல்
/
பேன் தொல்லையில் இருந்து கோழிகளை காக்க கரைசல்
PUBLISHED ON : செப் 10, 2025

பேன் தொல்லைகளில் இருந்து, கோழிகளை பாதுகாப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இதில், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்டலாம்.
மேய்ச்சலுக்கு செல்லும் கோழிகள், அடைகாக்கும் கோழிகளுக்கு பேன் தொல்லை வரும். பேன் தொல்லையால், கால்கள், இறக்கைகளை கோழி காயப்படுத்திக் கொள்ளும். இந்த காயத்தால் சில நேரங்களில், கோழிகளுக்கு சீழ் பிடித்து இறக்க நேரிடும்.
இதை தவிர்க்க, கோழி கூண்டு அல்லது கோழி பண்ணைகளில் எருக்கன், நொச்சி ஆகியவற்றை உலர்ந்த சருகில் புகை போட்டு, வேப்பெண்ணெய், உப்பு கரைசல் ஆகியவற்றை தடவினால், கோழிகளை இறப்பிலிருந்து தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594.