/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
எம்.டி.யு., - 1121 ஆந்திரா ரக நெல் களிமண் நிலத்தில் சாகுபடி
/
எம்.டி.யு., - 1121 ஆந்திரா ரக நெல் களிமண் நிலத்தில் சாகுபடி
எம்.டி.யு., - 1121 ஆந்திரா ரக நெல் களிமண் நிலத்தில் சாகுபடி
எம்.டி.யு., - 1121 ஆந்திரா ரக நெல் களிமண் நிலத்தில் சாகுபடி
PUBLISHED ON : செப் 10, 2025

களிமண் நிலத்தில், எம்.டி.யு.,- - 1121 ஆந்திரா ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:
என் நிலத்தில், பல வித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், எம்.டி.யு., - -1121 ஆந்திரா ரக நெல்லை, முதல் முறையாக சாகுபடி செய்துள்ளேன். இது, 120 நாளில் மகசூலுக்கு வரும். 2.5 அடி உயரம் மட்டுமே வளரும் தன்மை உடையது. மழைக்காலத்திலும், நெற்கதிர்கள் நிலத்தில் சாயாது.
ஏக்கருக்கு, 35 நெல் மூட்டைகள் மகசூலுக்கு கிடைக்கும் என, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். நம்மூர் களி மண் நிலத்தில், சாகுபடி செய்துள்ளேன். இந்த நெற்பயிரில் நோய் மற்றும் பூச்சி தாக்கமும் வெகு குறைவாகவே உள்ளது. அறுவடைக்கு பின்தான் மகசூல் நிலவரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஆர்.தேவராஜ், 87547 97918.