தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்திக்கு செல்லும், சிவகார்த்திகேயன்!

தெலுங்கில், சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமே தோல்வியாக அமைந்ததால், அதன்பிறகு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது, ஹிந்தி படத்தில் நடிக்க கதை கேட்டு, ஓ.கே., செய்துள்ளார். குறிப்பாக, இந்த கதை, தனுஷுக்காக தயார் செய்யப்பட்டது. அவரது, 'கால்ஷீட்' கிடைக்காததால், தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். அந்த வகையில், தனுஷ் நடித்த, 3 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான, சிவகார்த்திகேயன், இப்போது தனுஷுக்காக தயார் செய்த கதை மூலம், ஹிந்தியில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.

— சினிமா பொன்னையா

ஆர்.ஜே.பாலாஜியிடம் கதை கேட்ட, ரஜினி!

சமீபகாலமாக, எந்த இளவட்ட இயக்குனர்கள், 'ஹிட்' படங்களை கொடுத்தாலும், உடனே அவர்களை தொடர்பு கொண்டு பாராட்டுகிறார், ரஜினிகாந்த். அதோடு, 'எனக்கும் ஒரு நல்ல கதை, 'ரெடி' பண்ணுங்கள்...' என்றும் அவர்களை கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான, கருப்பு படத்தை இயக்கிய, நடிகரும், இயக்குனருமான, ஆர்.ஜே.பாலாஜியையும் வாழ்த்திய, ரஜினி, 'எனக்கேற்ற கதை உங்களிடம் உள்ளதா?' என்று கேட்டுள்ளார். அதற்கு, 'பல கதைகள் உள்ளன. சீக்கிரமே உங்களுக்கான கதையுடன் சந்திக்கிறேன்...' என்று கூறியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, ஆன்மிகம் மற்றும் சமூக பிரச்னை கலந்த ஒரு கதையை விரைவில், ரஜினியிடம் சொல்ல இருக்கிறார்.

சி.பொ.,

சவால் விடும், காஜல் அகர்வால்!

மகன் பிறந்த பின், சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் இறங்கியுள்ள, காஜல் அகர்வால், தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு மாறியுள்ளார். அதையடுத்து, 'ஷார்ட்ஸ்' அணிந்து, 'டிரெண்டிங்' உடைகளில், தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, வைரலாக்கி வருகிறார், காஜல் அகர்வால். 'இளவட்ட நடிகையருக்கு எந்த வகையிலும் நான் சளைத்தவள் அல்ல. அவர்களுக்கு சவால் விடும் வகையில், 'ரொமான்டிக்'கான, 'கிளாமர் ரோல்'களில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்...' என்று, 'கமர்ஷியல்' பட இயக்குனர்களுக்கு துாது அனுப்பி வருகிறார்.

எலீசா

புதுதோற்றத்தில், ஜோதிகா!

ஹிந்தி சினிமாவுக்கு சென்ற பின், உடல் எடை குறைத்து, 'ஸ்லிம்' ஆகியுள்ள ஜோதிகா, ஆடை அலங்காரத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார். தன்னை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக 'ஜீன்ஸ்' மற்றும் 'டாப்' உடைகளை அணிந்து தான் அவர், ஹிந்தி படவுலகில் வலம் வருகிறார். இதுபோன்ற உடைகளை தனக்கு பிரத்யேகமாக தயார் செய்ய, உடை அலங்கார நிபுணர் ஒருவரையும் நியமித்துள்ளார். 47 வயதில், ஜோதிகா செய்யும் இந்த, 'அட்ராசிட்டி'யை, ஹிந்தி படவுலகமே வியந்து பார்க்கிறது.

எலீசா

அச்சத்தை ஏற்படுத்திய, கில்லர் டைட்டில்!

சமீப காலமாக வில்லனாக நடித்து வரும், எஸ்.ஜே.சூர்யா, 10 ஆண்டுகளுக்கு பிறகு, கில்லர் என்ற தமிழ் படத்தை இயக்கி, 'ஹீரோ'வாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட போதே, விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பினார். அதையடுத்து, சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு பல தடைகள் ஏற்பட்டு வருவதால், கொலைகாரன் என்ற அர்த்தம் தரும், கில்லர் என்ற டைட்டில் தான் இப்படி, காவு வாங்குகிறதோ என்று அச்சப்படும், எஸ்.ஜே.சூர்யா, அந்த டைட்டிலை மாற்றுவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!

மறைந்த அந்த பிரபல நடிகையின் வாரிசு நடிகை, பாலிவுட்டில் இருந்து, தெலுங்கு சினிமாவுக்கு வந்துள்ள நிலையில், படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இதனால், அவருக்கான, தெலுங்கு சினிமா ரசிகர்கள் பெருகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு முன்னணி நடிகர்கள் பங்கேற்கும், 'பார்ட்டி'களிலும், 'டூ-பீஸ்' உடையில் களமிறங்கி, செம குத்தாட்டம் போடுகிறார். இந்த விவகாரம், அம்மணியின் தந்தை குலத்தின் காதுகளை எட்டியதை தொடர்ந்து, மகளின் இந்த அத்துமீறல் ஆட்டத்துக்கு அதிரடியாக தடை போட்டுள்ளார். 'இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு, உன் அம்மாவின் பெயரை கெடுத்து விடாதே...' என்று மகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறார்.

சினி துளிகள்!

* இயக்குனர், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 173- வது படத்தில் இயக்குனர், மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

* மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர், தேவரா மற்றும் பெத்தி போன்ற தெலுங்கு படங்களில் நடித்த பிறகு, இப்போது, ராக்கா என்ற தெலுங்கு படத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கிறார்.

* விஜய் சேதுபதி நடித்துள்ள, ட்ரெயின் என்ற தமிழ் படம், ரயில் பயணத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது.

* தென்னிந்திய நடிகையரில், 'பிரைவேட் ஜெட்' விமானம் வைத்துள்ள ஒரே நடிகை, நயன்தாரா தான். இந்த, 'பிரைவேட் ஜெட்' விமானத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாய்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us