PUBLISHED ON : செப் 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம் திருச்சூரில் உடற்பயிற்சியாளராக பணிபுரிகிறார், அமல் என்ற வாலிபர். இவர், தன் பைக்கில் ஊர் ஊராக சுற்றி வருவதில் ஆர்வமுள்ளவர். சுற்றுப்பயணம் செல்லும் போது, தன் வளர்ப்பு பூனையை அழைத்துச் செல்வது வழக்கம்.
கழுத்து மற்றும் முதுகு பகுதியில் பெல்ட் அணிந்து, கம்பீரமாக உட்கார்ந்தபடி செல்லும் பூனையை கண்டால், புலி குட்டி போல் இருக்கும். பயணத்தின் போது இவரை பரிசோதிக்கும், வன அதிகாரிகள் இவரது பூனையை கண்டு, 'இது புலிக்குட்டியா?' என்கின்றனர். ஆனால், தன்னிடம் உள்ள பூனைக்குரிய சான்றுகளை காட்டி, தன் பயணத்தை தொடர்கிறார்.
— ஜோல்னாபையன்