
என் வயது, 27. பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறேன். சிறுவயது முதல் நான் சிறுவர்மலர் வாசகி. சிறுவர்மலர் இதழை காட்டி, என் அம்மா எனக்கு கற்றுத்தந்தது, அடிக்கடி நினைவுக்கு வரும்.
இப்போதும் என் வீட்டிற்கு தினமலர் இணைப்பாக சனிக்கிழமை தோறும் மலரும், சிறுவர்மலர் புத்தகத்தை விரும்பி படிக்கிறேன். என், 2 வயது மகனுக்கு, சிறுவர்மலர் இதழை அளித்து, அதில் உள்ள படங்களை விளக்கி, கதை சொல்லி துாங்க வைக்கிறேன். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை படிக்கும் போது, என் பள்ளி, கல்லுாரி நாட்களை சில நொடிகள் கண் முன் கொண்டு வருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் தேவையான ருசியான, சத்தான உணவுகளை வழங்கும் 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி சூப்பர்.
குழந்தைகளின் கற்றல் திறனை துாண்டும் வகையில், புள்ளிகளை இணைத்து படத்தை வரவழைக்கும் பயிற்சி, இதுவரை யாரும் செய்யாத சிறப்பான முயற்சி. நானும் கூட வரைந்து பார்க்கிறேன். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் வெளிவரும் சிறுவர்மலர் இதழ், மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
- பி.எஸ்.ரதிபிரியா, பெங்களூரு.

