PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விமானப்படை தினம்
இந்தியாவின் வான் பகுதியை பாதுகாப்பதில் விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. 1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் இடம் பெற்றுள்ளது. 1.70 லட்சம் வீரர்கள் உள்ளனர். 2296 போர் விமானங்கள் உள்ளன.

