நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவர் இல்லா சுகாதார நிலையம்
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
-பிரேம், கள்ளக்குறிச்சி. -
மணல் கடத்தும் பெண்கள்
திருக்கோவிலுார் தென் பெண்ணையாற்றில் தலை சுமையாக மணல் மூட்டைகள் சட்ட விரோதமாக கடத்துவதற்கு தினக்கூலியாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி.
தெரு நாய்களால் அவதி
கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் சுற்றி வருகின்றன. இப்பகுதியில் குழந்தைகள், பெண்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
-ஆறுமுகம், கள்ளக்குறிச்சி. சாலையோர குப்பைகள்
சின்னசேலம் பகுதி தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகள் மூட்டை மூட்டைகளாக கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றும் வீசி, சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது.
-சத்யா, சின்னசேலம்.