/
புகார் பெட்டி
/
திண்டுக்கல்
/
தரைப்பாலம் சேதத்தால் உருவான பள்ளத்தால் தொடரும் விபத்து
/
தரைப்பாலம் சேதத்தால் உருவான பள்ளத்தால் தொடரும் விபத்து
தரைப்பாலம் சேதத்தால் உருவான பள்ளத்தால் தொடரும் விபத்து
தரைப்பாலம் சேதத்தால் உருவான பள்ளத்தால் தொடரும் விபத்து
ADDED : செப் 10, 2025 08:16 AM

சேதமான மின் கம்பம்
வேடசந்துார் வடமதுரை ரோடு சினேகா திருமண மஹால் எதிரே உள்ள மின் கம்பம் சேதமடைந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பம் முறிந்து கீழே விழுகும் முன் இதனை மாற்ற மின் துறை நடவடிக்கை வேண்டும். -ப.தங்கப்பாண்டி, வேடசந்துார்.
..........---------
ரோட்டில் குவியும் குப்பை
பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெரு ரோட்டில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .குப்பையும் சிதறி கிடக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவேதா, பழநி.
.................---------கழிவுநீரால் சுகாதாரக் கேடு
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பழநி பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பயணிகளும் முகம் சுளிக்கின்றனர் .கொசுக்கள் உற்பத்தியாவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது . வெங்கடேஷன், திண்டுக்கல்.
...........---------
வாகன ஓட்டிகள் அவதி
பழநி - திண்டுக்கல் ரோடு டிராவலர்ஸ் பங்களாரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் .விபத்துக்கள் நடப்பதால் ரோடை சீரமைக்க நடவடிக்கை வேண்டும். . ஜின்னா, மானுார் .
.........---------சேதமடைந்த நிழற்கூடம்
புத்துார் கரிவாடன்செட்டிபட்டி பயணியர் நிழற்கூடம் சேதமடைந்து கிடக்கிறது .இதனை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . சீரமைக்க கோரியும் எந்த நடவடிக்கையும் இல்லை. உள்ளாட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். --துரைப்பாண்டி அய்யலுார்.
முடங்கிய ரோடு பணி
சுந்தரபுரியிலிருந்து பாறைப்பட்டி செல்லும் ரோடு அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையாததால் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் . அ.சந்திர சேகர் மாரம்பாடி.
தரை பாலம் சேதம்
திண்டுக்கல் லட்சுமணபுரம் 4வது சந்தில் தரை பாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதன் வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் .அவ்வப்போது விபத்தும் நடக்கிறது. தரை பாலத்தை சீரமைக்க வேண்டும். கதிரேசன், திண்டுக்கல்.----------...............