sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி.விஜய் வசந்த் அறிக்கை:குமரி முதல்களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து உள்ளதால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து, சாலையின் அவலத்தை எடுத்துஉரைத்தேன். சாலையை செப்பனிட, 14.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; விரைவில் பணிகள் நிறைவு பெற்று, புதிய சாலை தரம் மிகுந்ததாக மாறும்.

தமிழகத்தில், காங்., - எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் பாதி பேரை தொகுதி பக்கமே காணலைன்னு சொந்த கட்சிக்காரங்களே தேடுற நிலையில், இவருக்கு சபாஷ் போடலாம்!

அ.தி.மு.க., மருத்துவர் அணிஇணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் எடுத்ததாக வழக்கம் போல அரசு அறிவிக்கிறது. இதுபோன்ற காலங்களில் எலி காய்ச்சல், காலரா, டைபாய்டு, மலேரியா, 'டெங்கு'அதிகமாக பரவும். அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா என, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பெரிய பெரிய விவகாரங்களுக்கே வெள்ளை அறிக்கை வெளியிடாதவங்க, இவர் குற்றச்சாட்டுக்கு வெத்து அறிக்கை வேணும்னா வெளியிடுவாங்க!

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: திருச்சியில் இருந்து, 144 பயணியருடன் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியாவிமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானசக்கரங்கள் இயங்கவில்லை. இதை கண்டுபிடித்த பைலட், விமானத்தை சாதுர்யமாக மீண்டும் திருச்சியில் தரைஇறக்கி, அனைவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளார். பைலட்டுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் வாழ்த்துகள்.

அசம்பாவிதம் நடந்திருந்தால், மத்திய அரசுக்கு பெரிய தர்மசங்கடமாகி இருக்கும்... நிச்சயம், பைலட்டை பாராட்ட வேண்டியது அவங்க தான்!

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'விளையாட்டு வீரர்கள், 100 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார். அதே நேரத்தில், கொரோனாவில் பணியாற்றி உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு வேண்டுகோள் விடுத்தது மட்டுமன்றி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு இன்னும் கருணை காட்டவில்லை என்பதை, துணை முதல்வர்கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

எல்லா துறைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்துற துணை முதல்வருக்கு இது தெரியாமலா இருக்கும்?






      Dinamalar
      Follow us