தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கோவை நீதிமன்ற பெண் ஊழியர் 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' உலகசாதனை

கோவை நீதிமன்ற பெண் ஊழியர் 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' உலகசாதனை

கோவை நீதிமன்ற பெண் ஊழியர் 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' உலகசாதனை


ADDED : நவ 18, 2024 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை ; கோவை நீதிமன்ற பெண் ஊழியர், 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில்', உலக சாதனை படைத்துள்ளார்.

கோவை, பீளமேடு, ஏர்போட் அருகிலுள்ள பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் முத்துமாரி,36. கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஆங்கில கூட்டெழுத்துக்களை, 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' முறையில் தலைகீழாக எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார்.

சென்னை 'கலாம்ஸ் வேல்டு ரிக்கார்டு' நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துமாரி, இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தில், பகுதி மூன்றில், இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பிலுள்ள , 50 குறிப்புகளை, கோடிட்ட தாளில், தலைகீழாக எழுதினார். ஆங்கில எழுத்துக்களை 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில்', 45 நிமிடம், 5 செகண்டில் நான்கு பக்கத்திற்கு எழுதி உலக சாதனை படைத்தார்.

இந்த எழுத்துக்களை முக கண்ணாடியில் பார்க்கும் போது, நேராக எழுதியது போல இருக்கும். கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், முத்துமாரிக்கு உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில், உலக சாதனை படைத்த முதல் நபர் முத்துமாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ஏற்கனவே, 'இந்தியா புக் ஆப் வேல்டு ரிக்கார்டு', 'நேசனல் டேலன்ட் அவார்டு-2024' ஆகிய விருதுகளையும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இது குறித்து முத்துமாரி கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து, சென்னை ஐகோர்ட்டில், அலுவலக உதவியாளராக கடந்த 2021ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தேன். தமிழ் வழியில் படித்த நான், ஆங்கில எழுத்துக்களை 'கர்சிவ் லெட்டர்' முறையில் எழுதுவதில் தனித்திறமை உண்டு.இதற்காக பள்ளி பருவத்தில் மாவட்ட அளவில் பல பரிசுகள் பெற்றுள்ளேன்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு வார்த்தையை 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில்' எழுதி பழகினேன். இதை பார்த்து பலர் பாராட்டினர். அதன் பிறகு, வாக்கியங்களாக எழுத படிப்படியாக பயிற்சி மேற்கொண்டேன். இதில், சாதனை நிகழ்த்த வேண்டும் என்று முயற்சி எடுத்தேன். நான் பணியாற்றும் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சட்ட புத்தகத்திலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய வாக்கியத்தை எழுதி உலக சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு முத்துமாரி கூறினார்.

உலக சாதனை படைத்த முத்துமாரியை, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி விஜயா மற்றும் நீதிபதிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us