தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/88 வயது மூதாட்டி பலாத்காரம்; 9ம் வகுப்பு மாணவர் கைது

88 வயது மூதாட்டி பலாத்காரம்; 9ம் வகுப்பு மாணவர் கைது

88 வயது மூதாட்டி பலாத்காரம்; 9ம் வகுப்பு மாணவர் கைது

3


ADDED : ஏப் 03, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஏப் 03, 2026 01:55 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 88 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியைச் சேர்ந்த 88 வயது மூதாட்டியின் இரு மகன்களும் இறந்து விட்டனர். அவர் இளைய மருமகளுடன் வசித்து வருகிறார். மருமகள் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்கிறார்.

மார்ச் 29- இரவு 8:30 மணிக்கு வேலை முடிந்து மருமகள் திரும்பி வந்தபோது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே ரத்தமும் இருந்தது. மூதாட்டியின் மகள் வந்து விசாரித்த போது மதியம் வீட்டிற்குள் வந்த ஒருவன் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். பிறகு அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. மூதாட்டியின் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us